தமிழ் இணைய உலகில் புது நட்புகளை உருவாக்கிக்கொள்வது எப்பொழுதுமே அலாதியானது. இணைய நட்பை நேரில் சந்திக்கும் மகிழ்ச்சி அதைவிட அலாதியானது. நண்பர் வினையூக்கியை சில தினங்களுக்கு முன்னர் பாரிஸில் வரவேற்று இல்லத்திற்கு அழைத்து வரும்பொழுது 30 வருடங்களுக்கு முன்னர் நான் முதன்முதலில் பாரிஸிற்கு வந்த நினைவுகள் மலர்ந்தன.
மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருக்கும்பொழுது, "நீங்கள் ஏன் வலைப்பதிவு ஒன்றைத் தொடங்கக்கூடாது" என வினையூக்கி கேட்டார். நண்பர் ஓசை செல்லா கூட நீண்ட காலமாக என்னிடம் இதையே வலியுறுத்திக்கொண்டிருந்தார். பணிச்சூழல் காரணமாகத் வலையுலக முயற்சியைத் தள்ளிப்போட்டுக்கொண்டிருந்தேன்.
முப்பது வருடங்களுக்கு முன்னர் மே மூன்றாம் தேதி, பிரெஞ்சு தேசத்தில் நான் காலடி வைத்த தினமான இன்றே, என் அயல் தேசத்து அனுபவங்களை பதியத் துவங்குகின்றேன்.
கல்லூரி காலம் தொட்டு பிரான்சு கனவு தேசம் ஆனாலும், படிப்பும் வாழ்க்கையோட்டமும் என்னை டாலர் தேசத்திற்கே முதலில் கூட்டிச்சென்றது. 1981 ஆம் வருடம், வசந்த காலக் காற்றை சுவாசித்துக்கொண்டே, பாரிஸில் காலடி எடுத்து வைக்கின்றேன்.
ஈஃபிள் கோபுரத்தை தூரத்தில் கண்கொண்டு. சைன் நதிக்கரையில் கலை இலக்கிய ரசனையை நினைவில் பிணைத்துக்கொண்டு, எனக்கான தங்குமிடத்தை நோக்கி காரில் விரைந்து கொண்டிருந்த பொழுது என் லட்சியம் நிறைவேறிய மகிழ்ச்சி என் கண்களிலும் பேச்சிலும் தெரிந்ததை, அமெரிக்காவில் சந்தித்த பிரெஞ்சு தம்பதியர் வெகுவாக ரசித்துக் கொண்டிருந்தனர்,
யுனெஸ்கோவில் பயிற்சிப் பெற, பாரிஸ் வந்த எனக்கு மேற்சொன்ன பிரெஞ்சு தம்பதியினர்தாம் இலவசமாக, ஆனாலும் மிகுந்த வசதியுடன் கூடிய அரண்மனையின் இணைப்பாக இருந்த இல்லம் ஒன்றில் இடம் கொடுத்தனர், நான் தங்கவைக்கப்பட்ட இடத்தின் வலது பக்கத்தில் பிரெஞ்சு அதிபரின் மாளிகை, இடது பக்கம் அமெரிக்க தூதரின் இல்லம்.
பண்பாட்டு காலாச்சார அடையாளங்களுடன் நவ நாகரிக ஆடையலங்கார கடைகளையும் கொண்டிருந்த உலகப்புகழ்பெற்ற இந்தத் தெருவின் பெயர் Rue du Faubourg Saint Honoré.
உலகப் புகழ் பெற்றவர்களையும் பணக்காரர்களையும் இந்தத் தெருவில் சர்வசாதரணமாகப் பார்க்கலாம் என்று கூறிய பிரெஞ்சு தம்பதியினர் மதிய உணவிற்காக, அருகில் இருந்த இந்திய உணவகத்திற்குக் கூட்டிசென்றனர்,
அங்கும் எனக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது,
தொடரும்
Tuesday, May 3, 2011
அந்த நாள் ஞாபகம் நினைவிலே ... (1)


8 comments:
Welcome to blog world
அண்ணே, வணக்கம் ! அட்டகாசம் ! உங்கள் வலைப்பூ "உலகம் சுற்றும் வாலிபன்" படம் மாதிரி இருக்க வாழ்த்துகிறேன் ! தம்பி வினையூக்கி பலரையும் பயிற்றுவித்தவன் ! அவனுக்கும் என் நன்றிகள் !
அங்கும் எனக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது,///
உங்கள் வாழ்வின் ஆச்சரியப்பகுதிகளை , விரைவாக எதிர் பார்க்கின்றோம்...
வலைபூவிலும் உங்கள் வாசத்தை பார்ப்பதில் மிகுந்த ஆர்வமாக இருக்கின்றோம் ...
நன்றி முதல் சிறப்பான பகிர்விற்கு...
மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்....
வாழ்த்துக்கு நன்றி வினையூக்கி. ஊங்கள் உதவியாலும்,அன்புத்தொல்லையாலும் ஆரம்பித்த வினைதான் இது.
வாழ்த்துக்கு நன்றி செல்லா அவர்களே. வெளிநாடு செல்லுமுன், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் பிகார் மாநிலங்களிலும், சென்னை, கல்குத்தா, டெல்லி போன்ற நகரங்களிலும் வாழ்ந்தவன். உலகில் நான்கு கண்டங்களில் பணிபுரிந்தவன் என்றமையால், என் வலைப்பூவிற்கு "உலகம் சுற்றும் வாலிபன்" என்றுதான் பெயர் வைக்கலாம் என்று நினைத்தேன். மனதால் வாலிபனாக நினைத்தாலும் வயதால் சாத்தியமில்லை.
உங்கள் வலைப் பூ நிச்சயம் மற்றவர்களுக்கு உபயோகமாக இருக்கும். வாழ்த்துக்கள்.
lkc அவர்களுக்கு வணக்கம் பல. உங்கள் ஆர்வத்திற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி. உங்கள் எதிர்பார்த்தல் எனக்கு அச்சதைக் கொடுக்கிறது. முயற்சி செய்கிறேன். அன்புடன் விஜய்
வாழ்த்துகள் விஜய். உலகில் நான்கு கண்டங்களில் பணிபுரிந்த உங்கள் அனுபவங்கள், தமிழர்களுக்குக் கண்கண்ட மருந்து. கவினுலக விருந்து.
விவரப் பக்கத்தில் உங்கள் அசல் முகத்தை வைத்தால் என்ன?
Post a Comment